FridayCinema Org

FridayCinema Org Fridays - The day that becomes the gateway of success-destination of dreams-the definer of status in box office. Friday Cinema represents your thoughts.

25/08/2026

The mystery surrounding finally takes shape as the official trailer is out now.

In cinemas on 11th September

youtube.com/watch?v=Bm5S7Z…

       #எல்லாமதமும்சம்மதம்  #கேப்டன்பிறந்தநாள்
25/08/2026

#எல்லாமதமும்சம்மதம் #கேப்டன்பிறந்தநாள்

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 -வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 25.08.2...
25/08/2026

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 -வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 25.08.2026 நடிகர் சங்க வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் திரு. நாசர், பொருளாளர் திரு.கார்த்தி , செயற்குழு உறுப்பினர்கள் திரு.ஹேமச்சந்திரன், திரு.தளபதி தினேஷ், திரு. ஸ்ரீமன், நியமனநியமன செயற்குழு உறுப்பினர்கள்
திரு.M.செளந்தரராஜா, திரு. K. K.சரவணன் மற்றும் சங்க மேலாளர் திரு. தாமராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.







பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்!*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம்*மாண்புமிகு தமிழ்நாடு ...
24/08/2026

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்!

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம்*

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கு,

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது பணிவான வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எங்களது கோரிக்கையை தங்களிடம் முன்வைத்திருந்தோம்.

எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் நினைவாக தேனியில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

தமிழ்த் திரைப்படக் கலைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞரின் நினைவைப் போற்றும் இந்த அறிவிப்பு, அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், குறிப்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எங்களது கோரிக்கையை ஏற்று, பாரதிராஜா அவர்களின் கலைப் பங்களிப்பையும், தமிழ்த் திரையுலகின் வரலாற்றையும் மதித்து இந்தச் சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது இதயப்பூர்வமான நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மணிமண்டபம், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நினைவை மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையும், அதன் மகத்தான கலைஞர்களின் பங்களிப்பையும் எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நன்றி. வணக்கம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில்,

ஆர்.கே. செல்வமணி
(தலைவர்)

ஆர்.வி. உதயகுமார்
(பொதுச்செயலாளர்)

ம. பேரரசு
(பொருளாளர்)

  — Pooja Ceremony Pics ✨Shoots Starts From TodayG.V.Prakash Kumar Nikki Makkonen Sai Devanand murugu filmmaker Sean Rol...
24/08/2026

— Pooja Ceremony Pics ✨

Shoots Starts From Today

G.V.Prakash Kumar Nikki Makkonen Sai Devanand murugu filmmaker Sean Roldan

Radhimaa is all yours ! ❤️Audio OUT NOW 🎧❤️‍🩹 bfan.link/radhimaaComposed ,sung & produced by Lyricist- Female vocals - N...
24/08/2026

Radhimaa is all yours ! ❤️

Audio OUT NOW 🎧❤️‍🩹
bfan.link/radhimaa

Composed ,sung & produced by
Lyricist-
Female vocals - Nargis & Ashma

24/08/2026

சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்..।
“சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !!

நட்டி - விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!

காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் அதிரடி திரில்லர் படம் !

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும்
மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில்,
அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்!

இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது..

சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய 'சொடக்கு' படம் வருவது பெரிய பிளஸ். இது த்ரில்லர் படம்.
'சொடக்கு' டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்க படம் வீட்டுச் சாப்பாடு மாதிரி.
உடம்பை உற்சாகம் படுத்தும் . ருசிக்க ருசிக்க சுவை தரும்.

‘சொடக்கு’ போடுகிற நேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையே மாறும். அப்படி ஒரு நேரத்தில் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்னென்ன நடந்தது என்பதுதான் இந்தக் கதை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அப்படி திருப்பிப் போடுகிற நிகழ்ச்சிகள் கொண்டு வந்து சேர்க்கிற சுவாரஸ்யங்களும், அதிரடி திருப்பங்களும் இதில் இருக்கும்.
இந்தக்கதை நமக்கு நெருக்கமாக இருக்கும் என்பது உண்மை. இன்னுமொரு விஷயமாக நாளை நடப்பது இன்றைக்கே நமக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படுகிற மாற்றங்களும், குழப்பங்களும் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் கதையாக இருக்கிறது. இந்த திரைக்கதை ஒரு த்ரில்லர் குடும்பத்தோடு பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும்.

நட்டி, கதையை உள்வாங்கிக் கொண்டு அதில் தன் இயல்பையும் கொண்டு வந்து சேர்கிறார். உங்களிடம் நல்ல பிரசன்டேஷன் இருக்கிறது. நல்ல கதை இருந்தால் தயக்கமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் போன் செய்யுங்கள். பேசலாம். படமும் பண்ணலாம் என்றார். எனக்கு இயக்குநர்கள் லிங்குசாமியும், சரணும் நெருங்கிய நண்பர்கள். என் உயர்வில் சந்தோஷப்படுகிறவர்கள். அவர்களின் முயற்சியிலும் இந்த கூட்டணி அமைந்தது. கயல் ஆனந்தி , ரக்ஷிதா, அபிஷேக், டத்தோ கணேசன் என நல்ல கூட்டணி அமைந்தது.

படங்களுக்கு வசனம் எழுதாத இயக்குநர் சரண் எனக்காக வசனத்தை எழுதினார்.

சொல்லில் வருவது பாதி என்பார்கள். அது மாதிரி டைரக்டர் சொல்வதை ஒரு மாதிரி புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒரு மாதிரி எடுப்பதெல்லாம் இங்கே நடக்கும். அப்படி எதுவும் இல்லாமல் அப்படியே நான் நினைப்பதை எடுத்தார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். இவர் 'குரங்கு பொம்மை'யில் வித்தை காட்டியவர்.
இப்படத்தின் மியூசிக் டைரக்டர் அபிஷேக்.
உயிரையும், உணர்வையும் உறுத்துகிற விதத்தில் பாடல்களும், பின்னணியையும் செய்து கொடுத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் படித்த மாணவர் இவர்.
மலேஷியாவில் தான் கதை முழுக்கவும் நடக்கிறது. அதன் அழகையும் படம் பிடித்து இருக்கிறோம். படம் மொத்தமும் மலேசியாவில் படமானதற்கும் தயாரிப்பாளர்கள் முத்துக்குமார், தேவா அர்ஜுன், டத்தோ கணேசன் ஆறுமுகமும் உதவினார்கள்.

சினிமாவை படிக்க முடியாது. ஆனால் உணர முடியும் என்று ‘குயின் டிரான்சநாண்டோ’ சொன்னார். அதை நானும் உணர்ந்தவன். ஒரு நல்ல த்ரில்லருக்காகவும், ஒரு நல்ல கமர்ஷியலுக்காகவும் 'சொடக்கு' படத்தை பார்க்க வந்தால் அது வீண் போகாது. உரிய அழகியல் மதிப்போடு இன்றைய இளைஞர்களைக் குறிவைத்து உழைப்பை விதைக்கிறோம். நிச்சயம் அறுவடை செய்வோம்.

Editing: G.Ramarao,
DOP: N.S.Uthayakumar (குரங்கு பொம்மை),
Stunt: ‘Vin’ Veera,
Executive Producer: K.S.Mayilvaganan

Music: Abhishek.A.R Introdection ( குறும்படங்களுக்கான இசையமைப்பு போட்டியில் தேசிய விருது பெற்றவர் ).

Presents: Masterpiece

Production: Deva Entertainments & Jubilee Film Productions
PRO: Johnson

Produced By: Muthukumar, Devha Arjhun &
Dato Ganesan Arumugam

Title: “SODAKU”

Dialogue: Director Saran,
Story,Screenplay & Direction: Kamaraj Manonmani.

தமிழக முதல்வரின் அம்மா பிறந்த நாள்!குவியும் வாழ்த்துக்கள் 🎉 Singer, Producer, Director Shoba Chandrasekaran’s Birtthday....
24/08/2026

தமிழக முதல்வரின் அம்மா பிறந்த நாள்!
குவியும் வாழ்த்துக்கள் 🎉

Singer, Producer, Director Shoba Chandrasekaran’s Birtthday.





.  abt     |   |
24/08/2026

. abt

| |

 அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படபிடிப்பு செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் நிலையில்..அஜித்துக்கு மீண்டும் கார...
24/08/2026


அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படபிடிப்பு செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் நிலையில்..

அஜித்துக்கு மீண்டும் கார் ரேசில் விபத்து!!

,

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when FridayCinema Org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FridayCinema Org:

Shortcuts

Share