Lakshmi Cinemas

Lakshmi Cinemas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lakshmi Cinemas, Cinema, Marthandam, Vilavancode, Marthandam.

19/11/2024
28/02/2024

டேய் யாருடா நீங்க எல்லாம்? இப்படி ஒரு பிரமாதமான படத்தை எடுத்து இருக்கீங்க.. அவ்ளோ சீக்கிரம் நான்'லாம் அழவே மாட்டேன்.. கடைசியா அயோத்தி படம் பார்க்கும்போது அழுதது.. அதற்கு அப்புறம் இந்த படத்துல என்னை அறியாம கண்ணுல தண்ணி பொலபொலன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.. அதுவும் குறிப்பா "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல'ன்னு குணா பாட்டை ஒரு முக்கியமான இடத்தில ஒலிக்க விடுவாங்க பாருங்க.. ஐயோ கூஸ்பம்ஸ் மொமண்ட்.. தியேட்டரே அலறிடுச்சி... அந்த இடத்துல கைதட்டி தட்டி தட்டி, கையே வலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி.. இப்படி ஒரு Vibe'ஆன தியேட்டர் மெட்டீரியலை சமீபத்துல பார்க்கல..

என்ன ஒரு அட்டகாசமான படம்.. அதுவும் கிளைமாக்ஸ்'ல அந்த அம்மா கட்டிப்பிடிக்கிற காட்சி எல்லாம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.. இப்படி ஒரு படம் வாய்ப்பே இல்ல.. தயவு செஞ்சு இந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க... கொடுத்த காசுக்கு அவ்ளோ ஒர்த்...

ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்'ன்னா அடி உதைக்கு மட்டும் இல்லாம, அவரை எப்படி பயன்படுத்தணும்ன்னு பாடம் எடுத்திருக்காங்க.. செட் ஒர்க், சிஜி, மியூஸிக், கேமரா'ன்னு அதகளம் பண்ணி இருக்காங்க.. வசூல்ல பட்டைய கிளப்புது இந்தப்படம்.. கண்டிப்பா விருதுகளும் அள்ளும்..

எனக்கு இதுல என்ன ஆச்சரியம்னா...இப்போ நாம ஒரு தமிழ் படம் எடுக்கிறோம்'ன்னா அதுல ஹைலைட்டான, எமோஷலான ஒரு மொமண்ட்ல தமிழ் பாட்டு தானே வைப்போம்? ஒரு தெலுங்கு பாட்டோ, மலையாள பாட்டோ, கன்னட பாட்டோவா வைப்போம்? ஆனா இவங்க படத்தோட அதி உச்சபட்சமான ஹை எமோஷனல் சீன்ல ஒரு தமிழ் பாட்ட வெச்சிருக்காங்க.. நம்ப கூட இந்த அளவுக்கு இளையராஜாவை தூக்கி கொண்டாடியிருப்போமான்னு தெரியல.. கேரளதேசத்து நண்பர்கள், பிரிச்சு மேஞ்சிட்டாங்க.. வொண்டர் ஃபுல் ஃபிலிம்..

படம் பார்த்து முடிச்ச உடனே வாட்ஸ் அப்ல, "ப்ளீஸ் இந்தப்படத்தை மிஸ் பண்ணுடாதீங்க"ன்னு ஸ்டேட்டஸ் வச்சுருக்கேன்.. 20 வாட்ஸப் க்ரூப்ல இந்த படத்தை பத்தி பெரிய ரைட் அப் எழுதி ஷேர் பண்ணி இருக்கேன்... நண்பர்களுக்கு என் செலவுல டிக்கெட் புக் பண்ணி கொடுத்து இருக்கேன்.. ஆபீஸ்ல இருந்து ஒரு பெரிய கூட்டத்தை தியேட்டருக்கு அனுப்பி வைக்க போறேன்.. நான் எழுதுனதை நம்பி, அவ்ளோ பேரும் புக் பண்ணியிருக்கோம்'ன்னு மெஸேஜ் பண்றாங்க.. அந்த அளவுக்கு இந்த படம் என்னை நெகிழ வெச்சி இருக்கு... ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் Lots of Love...Hugs.. Hats off...

- 2024

28/02/2024

தற்போது வெளிவந்த கேரள படமான மஞ்சுமெல்பாய்ஸ் திரைப்படம் யதார்த்தமான பதிவால், சமாதானமில்லாத திரைக்கதை,கம்பீரமான ஒளிப்பதிவு, புத்திசாலித்தனமான ஒளிகலவை,வர்த்தக ரீதியாக வசூலையும் வறவேற்ப்பையும் பெற்றுள்ளது,கதையை இயக்குனர் சிதம்பரம் மிக திறமையாக நகர்த்தி இருக்கிறார்,நல்ல பட்ஜெட் லெவலில் இப்படி ஒரு வெற்றி என்பது இயக்குனரால்தான் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, தயாரிப்பாளர்கள் இயக்குனரை முழுமையாக நம்பியிருப்பதே படத்தின் வெற்றி, கோடைக்கானலின் படப்பிடிப்பு கதைக்குதேவையான அழகை மட்டுமே பதிவுசெய்திருக்கிறது, சம்பவங்களை சினிமாவாக்கினாலும் நல்ல இயக்குனரை தயாரிப்பாளர்கள் சந்தேகமில்லாமல் ஆர்வகோளார்தனம் பண்ணாமல் நம்பியதுதான் இதன்கூடுதல் பலம், மறக்கமுடியாத சினிமாவில் கவிதை இந்த படைப்பு, சினிமாமொழிகளை கடந்தவை என்பதற்கு மஞ்சுமெல் பாய்ஸ்படமே தரச்சான்று, விருதுகளும் அள்ளும் வர்த்தகரீதியாக வெல்லும் ஒருமுறை அவசியம் பாருங்கள் உங்கள் டிக்கெட் பணம் திருப்த்திதரும்.இவன் லேபர்பட இயக்குனர் சத்தியபதி,

Address

Marthandam, Vilavancode
Marthandam
629165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmi Cinemas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category