Adra Sake Adra Sake Adra Sake."

Adra Sake Adra Sake Adra Sake." Entertain with goundamani comedys

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே 1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...நின்று போ...
13/07/2025

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

19/01/2025
⚱️⚱️⚱️⚱️⚱️
09/01/2025

⚱️⚱️⚱️⚱️⚱️

இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்த சூர்யா
09/01/2025

இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்த சூர்யா

தரைல ஒரு வட்டத்த போட்டு இந்த சிக்ரெட் அட்டைய நடுவுல வச்சு  ஒரு கேம் விளையாடுவோம் அது யாருக்காவது ஞாபகம் இருக்கா ப்ரண்ட்ஸ...
09/01/2025

தரைல ஒரு வட்டத்த போட்டு இந்த சிக்ரெட் அட்டைய நடுவுல வச்சு ஒரு கேம் விளையாடுவோம் அது யாருக்காவது ஞாபகம் இருக்கா ப்ரண்ட்ஸ்😍😍

பத்திரம்..🤩🤭
08/01/2025

பத்திரம்..🤩🤭

Four type பிரியாணி....All time ஆம்பூர் மட்டன் பிரியாணிதேவையான பொருட்கள் :பொருள்அளவுமட்டன் அரை கிலோ அhpசி கால் கிலோவெங்கா...
07/01/2025

Four type பிரியாணி....

All time ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
மட்டன் அரை கிலோ
அhpசி கால் கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
புதினா, கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
எலுமிச்சை பழம் ஒன்று
மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
பிரியாணி மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க-1 :
பச்சை மிளகாய் - 5
இஞ்சி துண்டு - 1
பூண்டு பல் - 10

அரைக்க-2 :
முந்திரி - 10
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்

தாளிக்க :
ப்ரிஞ்சி இலை - 2
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
லவங்கம் - 5
நட்சத்திர மொக்கு - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப

ஊற வைக்க:
மிளகாய், தனியா கலவை - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர் - அரை கப்
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

செய்முறை :

மட்டனை சுத்தம் செய்து ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு மட்டனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் மட்டனைத் தனியாகவும், தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.

அரைக்க-1ல் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வாசனை போக பிரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.

பிறகு வேக வைத்த மட்டனைச் சேர்த்து 5 நிமிடங்கள் பிரட்டவும்.

அரைக்க-2ல் கொடுத்துள்ளவற்றில் முந்திரியை 15 நிமிடங்கள் ஊற வைத்து சோம்பு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

அரைத்த முந்திரி விழுதை வதக்கிய மட்டன் கலவையில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

பிறகு மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி 5 கப் அளவிற்கு தண்ணீரை அளந்து ஊற்றிக் கொதிக்கவிடவும். (தண்ணீரின் அளவு பயன்படுத்தும் அரிசியின் அளவைச் சார்ந்தது).

கொதிக்கத் துவங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும்.

முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து அரை மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.

சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார்.

இந்த பிரியாணியை செய்தவுடனேயே சாப்பிடுவதைவிட ஒரு மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துச் சாப்பிடால் மிகுந்த சுவையாக இருக்கும்.



திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
நெய் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
புதினா 1 கைப்பிடி
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு :
சிக்கன் - அரை கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

பிரியாணி மசாலா பொடிக்கு :
சோம்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4
செய்முறை :

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி தழை, புதினா, தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!



புதுக்கோட்டை செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் அரை கிலோ
அரிசி 4 கப்
வெங்காயம் 3 (நறுக்கியது)
தக்காளி 3
புதினா1 சிறிய கட்டு
கொத்தமல்லி தழை 1 கைப்பிடி
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
புளித்த தயிர் கால் கப்
தேங்காய் பால்2 கப்
வறுத்த முந்திரி 7
தண்ணீர் 7 கப்
பிரியாணி இலை 2
எண்ணெய் தேவைக்கேற்ப
வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு :
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.

அதன் பிறகு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி, அதன் மேல் கொத்தமல்லி தழை, முந்திரி, 1 டீஸ்பூன் எலுமிச்சஞ்சாறு சேர்த்து பரிமாறலாம். சிக்கன் பிரியாணி ரெடி!!!



கேட்ரீங் ஸ்டைல் சிக்கன் பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன
பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் -2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.

🎉 Facebook recognised me as a top rising creator this week!
06/01/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

Adapaavi🤪🤪🤪
06/01/2025

Adapaavi🤪🤪🤪

🤪🤩🤭
06/01/2025

🤪🤩🤭

அதும் எப்படி னா அந்த ஹீரோயின் இப்படி பண்ணாங்க அடே கருவட்டி தலையா இப்போ இதுலாம் சகஜம்தான் டா லிங் ன் முதல் கமெண்ட்...
06/01/2025

அதும் எப்படி னா அந்த ஹீரோயின் இப்படி பண்ணாங்க அடே கருவட்டி தலையா இப்போ இதுலாம் சகஜம்தான் டா

லிங் ன் முதல் கமெண்ட்...

முடிஞ்ச உதவியை செய்கிறேன்.. ஒரு லைக், & ஷேர் கிடைகுமா..Bala Kpy Raghava Lawrence                             Genetic Tha...
06/01/2025

முடிஞ்ச உதவியை செய்கிறேன்.. ஒரு லைக், & ஷேர் கிடைகுமா..

Bala Kpy Raghava Lawrence Genetic Thamizhan 💙❤️💙

Address

Chennai
600018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adra Sake Adra Sake Adra Sake." posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adra Sake Adra Sake Adra Sake.":

Share

Category