Ponniyin Selvan Stage Play Offer

Ponniyin Selvan Stage Play Offer PONNIYIN SELVAN Stage Play page is created to share excellence of ponniyin selvan novel among ponniyin selvan Fans

PS1 & PS2BY MANI RATNAM
20/11/2024

PS1 & PS2

BY MANI RATNAM

1980 ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மன்சூர் க்ரியேஷன்ஸ் தயாரிச்சிருந்தாங்க. இந்தப் படத்தில்...
21/09/2024

1980 ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

மன்சூர் க்ரியேஷன்ஸ் தயாரிச்சிருந்தாங்க. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். ஆனால் ஒரு பெண் குரல் பாடல் கூட இல்லை. டி. ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்துக்கு மூலக்கதை, பாடல்கள், இசைன்னு பல பங்களிப்புகளைச் செய்திருந்தார். ஆனால் தயாரிப்பாளரோட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப் பட்டது. ஒரு சீன்ல மட்டும் வருவார். இளமையான ராஜேந்தரைப் பார்க்கலாம். இந்தப் படத்தில் தான் தன்னோட ஆருயிர் மனைவியான உஷாவை சந்திச்சிருக்காரு. உஷா கதாநாயகி ரூபாவோட தோழியா வருவாங்க. சிம்பு மாதிரியே இருப்பாங்க. இரண்டு பேருக்கும் ஏற்கனவே காதல் தோல்வி இருந்ததால் அது பத்தி பேசி இவங்க லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னு ஒரு தடவை படிச்சிருக்கேன்.. காலேஜ் கலாட்டாக்கள் ரசிக்கிற மாதிரி இருக்கும்.. மாணவர்களா நடிச்ச கைலாஷ் நாத், ரவீந்தர், தியாகு எல்லாம் அந்தக் கால மாடல் பெல்பாட்டம் பேண்ட் போட்டு, இயல்பா நடிச்சிருப்பாங்க.

சோகமான க்ளைமாக்ஸ்.. இதுல இன்னொரு பெரிய சோகம் என்னன்னா "என் கதை முடியும் நேரமிது.." பாட்டைப் பாடிய டி.எம்.எஸ் அதுக்கப்புறம் பாடவே இல்லைங்கறதுதான்.. அந்த மாதிரி அறச்சொல்லா அமைஞ்ச பாட்டுதான் அதுக்குக் காரணம்னு சொல்லுவாங்க.. டூயட் இல்லாத, நாயகனும், நாயகியும் கட்டிப் பிடித்து நடிக்காத படம் இது.‌. அப்போதைய தமிழ்த் திரையுலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட படம் இது.. போதைக்கு அடிமையான மாணவராக நடித்த சந்திரசேகர் சொல்லும் 'வெள்ளை ரோஜா' கதை இன்னும் ஹிட் தான்..

இந்தப் படத்துல ஒரு வசீகரம் இருக்கு.. மேல்தட்டு அழகில்லாத பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இயல்பான அழகா ஹீரோயின் ரூபா, உஷா, யதார்த்தமான அந்தக் காலத்தை பிரதிபலிக்கும் ஹீரோ சங்கர், மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே பொருத்தமா இருந்ததால் தான் இந்த வசீகரம் இருக்குன்னு நினைக்கிறேன்..

இன்னும் இந்தப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத லிஸ்ட்ல இருக்குது..

ஆய்வுக் கருத்தரங்கத்திற்குரிய தலைப்புகள்உலகெங்கும் நிலவும் முருக வழிபாடுஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன்சங்க இலக...
24/08/2024

ஆய்வுக் கருத்தரங்கத்திற்குரிய தலைப்புகள்
உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன்

சங்க இலக்கியங்களில் சேயோன், மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு

கல்வெட்டுகளில் முருகவேள்

வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு

சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன்

நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு

சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள்

வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன்

முருகனும் முத்தமிழும்

முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள், திருப்பணிகள் போன்றவை

நிகழ்ச்சி விவரம்தமிழ்நாடு அரசின்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 24.08.2024 மற்றும்...
24/08/2024

நிகழ்ச்சி விவரம்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 24.08.2024 மற்றும் 25.8.2024 தேதிகளில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் நடைபெறவுள்ளது. இதில் உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் பல்வேறு அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி, மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட உள்ளது.

இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச் சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத் தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக வழிபாட்டுச் சான்றோர் திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பெறும்.

ஆய்வரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தனியே விருதும் வழங்கப்பட உள்ளது. இதன் விவரங்கள் விரிவாகப் பின்வரும் நாட்களில் வெளியாகும். முதலில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்க உள்ளவர்களுக்குரிய குறிப்புகளை இத்துடன் வழங்கி உள்ளோம்.

24/08/2024

மாநாடு நடைபெறும் பழனி திருத்தலத்தின் சிறப்புகள் :

மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி, இதன் சிறப்புகளில் சிந்தனைக்குரிய சில:
முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.
முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.
நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.
‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.
ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது மிகமிகப் பொருத்தம்

Address

Chennai

Telephone

8681832510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ponniyin Selvan Stage Play Offer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category