10/10/2023
(english)
படத்தோட ஓப்பனிங்ல ரெண்டு பேரு ஒரு குழந்தை உட்பட முழு குடும்பத்தையே சுட்டு கொ*ன்னுட்டு கார்ல தப்பிக்கிறானுக... இப்ப கதைக்கு வருவோம்....
ஒரு ரெஸ்டாரென்ட் வைத்திருக்கும் ஹீரோ டாம் தனது மனைவி, ஒரு டீன் ஏஜ் மகன் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு நிம்மதியாக, அமைதியாக வாழ்ந்து வருகிறார்... குடும்பமே தனது உலகம் என வாழும் டாமுக்கு ஊருக்குள் நல்ல பெயர் இருக்கிறது...
இப்ப முதல் சீன்ல பார்த்த அந்த இரண்டு கொ*லைகாரர்கள் அன் டைமுல நம்ம ஹீரோவோட ஹோட்டலுக்கு சாப்பிட வந்து பிரச்சனை பன்னி அங்க வேலை செய்ற பொண்ண ரேப் பன்ன பார்க்க அதுவரை மாணிக்கமா இருந்த நம்ம டாம் பாட்சாவாக மாறி அவனுக கன்ன புடுங்கி அவனுகளவே சுட்டு சா*கடிக்கிறாப்ள...
செத்த அந்த ரெண்டு பேரும் போலீசால் தேடப்படும் குற்றவாளி என்பதால் அந்த ஊர் போலீஸ் அதிகாரி நம்ம ஹீரோவ பாராட்ட உள்ளூர் பத்திரிகை, டீவிகளில் நம்ம டாம் புகழ் பரவ உள்ளூர் மக்களின் பாராட்டு மழைகளில் நனைகிறார் டாம்....அவரது முகம் டீவிகளில் காட்டப்படுகிறது...
இப்ப எங்கிருந்தோ வந்த ரெண்டு பேர் டாம் கிட்ட வந்து "ஹாய் ஜாய்.... எதுக்கு இந்த டாம் வேசம்.... எங்களோட வா... ரிச்சி கூட்டிட்டு வர சொன்னான்" என்று சொல்ல டாமோ "நீங்க வேற யாரையோ நெனச்சு என்கிட்ட பேசுறீங்க.., எனக்கு ஜாய் யார்னே தெரியாது.... என் பேரு டாம் என்கிறார்.... உன்னை எப்படி வர வைக்கிறதுனு எங்களுக்கு தெரியும் என்று கோபத்தோடு கிளம்புகிறார்கள் அந்த ரெண்டு பேரும்.....
இதையெல்லாம் பார்த்துட்டு இருக்க ஹீரோயின் போலீஸ் ஆப்பிசருக்கு போன்ல தகவல் சொல்ல போலீஸ் அதிகாரி இரண்டு பேரையும் காரில் மடக்கி விசாரிக்கிறார்..... மேலும் அவர்களைப் பற்றி தகவல்கள் சேகரித்து விட்டு டாம் வீட்டுக்கு வந்து கேட்கிறார்..... "டாம்.... உன்னை தேடி வந்தவங்க பெரிய கடத்தல் மாபியா கும்பளை சேர்ந்தவங்க.... அவங்களோட பாஸ் இன்டர்நேஷனல் மாபியா கும்பள் லீடர் ரிச்சி.... அவர்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்" என கேட்க டாமோ எனக்கு அவங்கள யார்னே தெரியல என சத்தியம் செய்கிறார்....
இப்ப ஷாப்பிங் வந்த ஹீரோயின பாத்து அந்த ரெண்டு பேரும் உன் புருசனோட உண்மையான பேரு ஜாய்.... அவன் ஒரு ப்ரபஷனல் கில்லர்.... எங்களோட அவன அனுப்பலன்னா குடும்பத்தையே காலி பன்னிடுவோம் என மிரட்ட ஹீரோயின் டாம் கிட்ட வந்து உன்மைய சொல்லுங்க.... நீங்க யார்னு கேட்க டென்சனான டாம் "எவனோ ஒரு mother fu***er என்ன மாதிரியே இருந்தா அதுக்கு நான் என்னடி பன்னுவேன்னு கத்துறாரு....
இப்ப அதே ரெண்டு பேர் காலேஜ் போன தன் மகன கடத்திட்டு வந்து எங்க கூட வரலன்னா உன் மகன சுடுவோம் என மிரட்ட அவங்க ரெண்டு பேரையும் கொ*ன்னுட்டு அந்த ஜாய் நான் தான் என்று ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் டாம்...... மகனும் மனைவியும் அதிர்ச்சியடைகிறார்கள்....
இப்ப அந்த சர்வதேச மாபியா கும்பள் லீடர் ரிச்சி கிட்ட இருந்து நம்ம டாமுக்கு கால் வருது.... நீ இங்க வர்றியா இல்ல நான் அங்கே வரவா என ரிச்சி கேட்க நானே வாறேன் என கிளம்புகிறார் டாம்....
அந்த ரிச்சி நம்ம டாமோட கூட பிறந்த அண்ணன் தான்.... இருந்தாலும் பகையாளிகள்.... ரிச்சி பழைய பகைகளை பேசிட்டு இருக்கப்பவே தூணுக்கு பின்னாடி இருந்து வில்லன்கள் டாம் கழுத்தில் பைக் செயினை போட்டு இருக்க உடனே டாம் சுதாரித்து தனது அண்ணன் ரிச்சி உட்பட அத்தனை மாபியா கும்பளையும் போட்டு தள்ளிட்டு தன் குடும்பத்தோடு சேர்ந்து பழையபடி ரெஸ்டாரென்ட் நடத்துகிறார்.... இதோடு படம் முடிகிறது....