01/07/2025
அன்புடையீர்… வணக்கம் …
தமிழ்நாடு உதவி இயக்குநர்கள் சங்கம்:
பதிவு எண்: TNCHEJCLICHRTU 50-24-00078.
இச்சங்கம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு சுமார் 200 உறுப்பினர்களுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர அனைத்து இணை, துணை, உதவி இயக்குனர்களை தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குனர்கள் சங்கம் அன்போடு வரவேற்கிறது.
பேசா திரைப்படத்திலிருந்து பேசும் திரைப்படம் வரை கடந்த நூறு ஆண்டு காலமாக தமிழ்நாடு திரைப்படத் துறையில் இயக்குனர்கள் சங்கம் தொடங்கி படப்பிடிப்பிற்கு வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் சங்கம் வரை என 24 வகை சங்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு கதை கரு உருவாகுவதில் இருந்து அது திரையாகும் வரை நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு தனியாக சங்கம் கிடையாது. அதை வெற்றிகரமாக தமிழக அரசின் ஒப்புதலுடன் முறைப்படி செயல்படுத்தி உள்ளோம்.
உதவி இயக்குனர்கள் பெயரில் நிச்சயமாக இருக்க வேண்டும்.. அப்பொழுது தான் உதவி இயக்குனர்களின் பிரச்சனையை, தேவையை உறுதி செய்ய முடியும் என்கிற நோக்கமே நமக்கென ஒரு சங்கம்..
நமது சங்கத்தின் நோக்கங்கள்:
1. வேலைவாய்ப்பு, திரைப்பட ஊதியம் என்ற இந்த வாழ்வாதாரத்தை உறுதி செய்தபின் அடுத்ததாக நமது சங்க உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்துவது. குறிப்பாக அப்போலோ மருத்துவமனையில் ரூபாய் 70 ஆயிரத்துக்கு செய்யப்படும் முழு உடல் பரிசோதனை நமது சங்க உறுப்பினர்களுக்கு மிக மிக குறைவான 3500 ரூபாய் என்று கட்டணத்தில் கிடைக்க வழிவகை செய்ய உள்ளோம். அதேபோல சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையிலும் நமது சங்க உறுப்பினர்கள் எந்த நேரத்திற்கு சென்றாலும் டாக்டர் கன்சல்டேஷன் ஃபீஸ் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய உள்ளோம் .அதுபோல தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக E S I அடையாள அட்டை பெற்று நமது சங்க உறுப்பினர்கள் மத்திய அரசு மருத்துவமனைகளில் கூட இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.
2. நமது சங்க உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திரைப்பட வல்லுனர்களை அழைத்து திறன் மேம்பாட்டு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
3. முடிந்தவரை திரைப்பட தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து புதிய திரைப்படத்திற்கான கதை கேட்பதற்கு நமது சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை வைக்க உள்ளோம்.
4. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நமது சங்க உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் நமது உறுப்பினர் அடையாள அட்டையை வைத்து திரைப்படத்தை 50 சதவீதம் டிக்கெட் கட்டணத்திலேயே பார்த்து மகிழ தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
5. திரைப்படத்துறையில் நமது சங்க உறுப்பினர்களுக்கு ஏற்படும் சம்பளப் பிரச்சனை, கதை திருட்டு பிரச்சனை, படப்பிடிப்பில் ஏற்படும் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளுக்கும் நமது சங்கம் துணை நின்று நியாயமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி உறுப்பினர்களின் நலன்களை காக்கும்.
6. உலகம் முழுவதும் நடைபெறும் உலக திரைப்பட விழாக்களில் நமது உறுப்பினர்களின் படைப்புகள் mediator fees இல்லாமல் படங்களை திரையிடவும், விருதுகளை பெறவும் வழிவகை செய்யப்படும்.
7. நமது சங்க உறுப்பினர்கள் புதிய திரைப்படங்களை இயக்குவது சம்பந்தமாக தயாரிப்பாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளையும் சங்கம் முன்னின்று வழி செய்யும்.
8. கதைப் பதிவு, திரைக்கதை மற்றும் தலைப்பு பதிவுகளுக்கான முயற்சியையும் சங்கம் மேற்கொள்ளும்...
9..சங்க உறுப்பினர்களின் நலம் சார்ந்த கருத்துக்கள் என்றென்றும் வரவேற்கப்படுகின்றன.
நமது சங்கத்தில் சேர தேவையான ஆவணங்கள்;
1. உறுப்பினரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 2.
2. உறுப்பினரின் ஆதார் அட்டை.
3. உறுப்பினர் பணிபுரிந்த திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வரும் Screen Shot.
3. உறுப்பினர் பணிபுரிந்த திரைப்பட பணியின் போது எடுக்கப்பட்ட Working Stills.
4. உறுப்பினர் முதல் திரைப்படத்தில் பணி புரிகிறார் எனில் அந்த திரைப்படத்தின் இயக்குனரின் பரிந்துரை கடிதம். (இந்தத் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து சென்சார் சர்டிபிகேட் பெறும் வரை உறுப்பினர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும்)
நமது சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை கட்டண விபரங்கள்:
1.இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 600, சேர்க்கை கட்டணம் ரூபாய் 1400, ஆக மொத்தம் ரூபாய் 2000 மட்டுமே.
2.இயக்குநர்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 600, சேர்க்கை கட்டணம் ரூபாய் 4400, ஆக மொத்தம் ரூபாய் 5000.
கரம் நீட்டுகிறோம்… பற்றிக்கொள்ளுங்கள்.
பற்றிக் கொள்கிறோம்…. கரம் நீட்டுங்கள்.
தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கம்.
முகவரி: No: 2/C6, இரண்டாவது தளம், இராஜேந்திரா காலனி,அருணாச்சலம் சாலை, சாலிகிராமம், சென்னை 600 003.
தொலைபேசி எண்: 044 468902111
இ.மெயில்: [email protected]
Send a message to learn more